Home இலங்கை மைத்­தி­ரி­யின், கொள்கை அற்ற விளக்க உரை: TNA அதி­ருப்தி!!?

மைத்­தி­ரி­யின், கொள்கை அற்ற விளக்க உரை: TNA அதி­ருப்தி!!?

by admin

ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிரிசேன நேற்று முன்­தி­னம் நிகழ்த்­திய கொள்கை விளக்க உரை தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்புக்கு  ஏமாற்­றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் மக்­க­ளின் நீண்­ட­கால மற்­றும் உட­ன­டிப் பிரச்­சி­னை­க­ளுக்கு எப்­ப­டித் தீர்வை வழங்­கப் போகின்­றார் என்பது குறித்து அவ­ரது பேச்­சில் தொனிக்­க­வில்லை என்­றும் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­தாக கூறப்படுகிறது. இந்த நிலையில்  கொள்கை விளக்க உரை மீதான இன்­றைய விவா­தத்­தில் தமது அதி­ருப்­தியை வெளிக்­காட்­ட­வுள்­ள­தாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் நேற்று இடம்­பெற்­றுள்ளது.  ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீது இன்று விவா­தம் நடை­பெ­ற­வுள்­ளது. அத­னைத் தொடர்ந்து வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட்டால்,  அதன்­போது கூட்­ட­மைப்பு எவ்­வா­றான நிலைப்­பாடு எடுப்­பது என்­பது தொடர்­பில் ஆராய்­வ­தற்கே நேற்­றைய கூட்­டம் நடத்­தப்­பட்­டதாக கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஜனாதிபதியின்  கொள்கை விளக்க உரை, சபை ஒத்­தி­வைப்­புத் தீர்­மா­ன­மா­கவே இன்று விவா­தத்­துக்கு எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தால், அதன் மீது  வாக்கெடுப்பு நடத்தப்படமாட்டாது என கூறப்படுகிறது.

இருந்த போதும்,  ஜனாதிபதியின் உரை தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் நேற்­றைய கூட்­டத்­தில் ஆரா­யப்­பட்­டது. கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், ஜனாதிபதியின்  உரை தொடர்­பில் பெரும் ஏமாற்­றத்தை வெளி­யிட்­ட­னர். அர­சி­யல் தீர்வு தொடர்­பில் எது­வுமே அவர் குறிப்­பி­டாமை தொடர்­பில் கடும் அதி­ருப்­தியை வெளி­யிட்­ட­னர். இதனை கூட்­ட­மைப்­பின் தலை­மை­யும் அதனை ஏற்­றுக் கொண்­டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை­யில் தமிழ் மக்­கள் பிரச்­சி­னையை குறிப்­பி­டப்­ப­டாமை  குறித்து இன்­றைய விவா­தத்­தில் பேசு­மாறு கூட்­ட­மைப்­புத் தலைமை நேற்­றைய கூட்­டத்­தின்­போது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More