Home இலங்கைகோதபாய ராஜபக்ஸவை இலங்கையில் கைது செய்ய முடியாது :

கோதபாய ராஜபக்ஸவை இலங்கையில் கைது செய்ய முடியாது :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கோதபாய ராஜபக்ஸவை இலங்கையில் வைத்து கைது செய்ய முடியாது என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அமைச்சர், தனக்கும் அது தெரியவில்லை எனினும் கோதபாயவை இலங்கையில் கைது செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் இதைப் பற்றி கேட்கும் போதுதான் தன்னை சிலர் திட்டுகின்றார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த அமைச்சரவைக் காலத்திலும் கோதபாயவின் குற்றச் செயல்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தோம் என குறிப்பிட்டுள்ளார். ஒரு சிலர் மட்டுமே கடந்த அமைச்சரவையில் இருந்த போது முதுகெலும்புடன் பேசியதாகவும் ஏனையவர்கள் மா மன்னரே என விழித்து அஞ்சியே பேசினார்கள் எனவும் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More