Home உலகம்நடுவரை விமர்சனம் செய்ததாக ஜூவென்டோஸ் கழகத் தலைவர் மீது குற்றச்சாட்டு

நடுவரை விமர்சனம் செய்ததாக ஜூவென்டோஸ் கழகத் தலைவர் மீது குற்றச்சாட்டு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நடுவரை கடுமையாக விமர்சனம் செய்ததாக ஜூவென்டோஸ் கழகத்தின் தலைவர் ஜியான்லுஜி பபோன் ( Gianluigi Buffon  ) மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரியல் மட்ரீட் கழகத்திற்கு எதிரான சம்பியன்ஸ் லீக் போட்டியொன்றில் நடுவர் மைக்கல் ஒலிவரின் தீர்ப்பு குறித்து, ஜூவென்டோஸ் கழகத்தின் தலைவரும் கோல்காப்பாளருமான ஜியான்லுஜி கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.

போட்டியின் இறுதி நேரத்தில் வழங்கப்பட்ட பெனல்டி உதை தொடர்பிலேயே இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தது.நடுவரின் இருதயக் கூட்டுக்கள் இதயம் இல்லை வெறும் கழிகளே உள்ளதாகவும், நடுவராக பணி புரிய முடியாவிட்டால் ஓரமாக நின்று நொறுக்குத்தீணிகளை தின்று போட்டியை பார்வையிட்டிருக்க வேண்டுமெனவும் நடுவரின் தவறினால் ஒர் அணியின் கனவு கலைந்துள்ளதாகவும் விமர்சனம் செய்திருந்தார்.

எனினும், ஜியான்லுஜியின் செயற்பாடு விதி முறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் ஐரோப்பிய கால்பந்தாட்டப் பேரவை தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More