குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
கடந்த சில நாட்களின் முன்னர் இலங்கையில் உள்ள பட்டதாரிகள் அனைவரும் கொழும்பில் ஒன்றிணைந்து தமக்கான நியமனங்களை வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையின் பின்னரும், மூன்று மாதங்களின் பின்னரே பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் கூறியுள்ளதாக சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கருத்து பட்டதாரிகள் மத்தியில் அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. இதேவேளை கடந்த மாதம் பட்டதாரிகளை அபிவருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக்கொள்ளுவதற்கான நேர்முகங்கள் நாடு முழுவதும் இடம்பெற்றிருந்ததது. 2017ஆம் ஆண்டுவரை பல்கலைக்கழக படிப்பை நிறைவுசெய்த பட்டாரிகளுக்கு இதன்போது நேர்முகம் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் இவர்களுக்கு ஜூன் மாத்தில் நியமனங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இலங்கைப் பிரதமர் ரணில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பட்டதாரிகளை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளதுடன் மேலும் அவர்களை மேலும் அழுத்த்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஜூன் மாதத்தில் தொழில் கிடைக்கும் என்று காத்திருந்த நிலையில் பிரதமரின் கூற்று சந்தேகத்தையும் குழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2013 மற்றும் 2014ஆம் ஆண்டிலிருந்து பட்டப்படிப்பை நிறைவு செய்த பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலையற்ற நிலையில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் போர் மற்றும் அரசியல் நெருக்கடிகளின் மத்தியில் கல்வியை நிறைவு செய்த பட்டதாரிகள் வேலையற்ற நிலையில் பெரும் இடர்பாடுகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.
இதேவேளை பிரதமர் 3 மாதங்களில் வேலை தருவதாக கூறுகிறார். 2017,2018 இவ்வாறே கூறினார். பொய்யான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம். போராட்டத்திற்கு ஒன்றிணைவோம் என ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்க தலைவர் தன்னானந்த தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.
எவ்வாறெனினும் தமது தொழிலுரிமையை பெற்றுக்கொள்ளும்வரை ஓயப்போவதில்லை என்று வேலையற்ற பட்டதாரிகள் கூறுகின்றனர். மனித வலுயை மனித உழைப்பை அரசாங்கம் பயன்படுத்தாதிருப்பது நாட்டை பின்னடைவுக்கு இட்டுச்செல்லும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். நல்லாட்சியில் பட்டதாரிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுவதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.