Home இலங்கைமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு :

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வட மாகாணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலையில், குறித்த கொடுப்பனவுகளை வழங்க கோரி வடமாகாணத்தில் உள்ள அரச வைத்தியர்கள் இன்று திங்கட்கிழமை (14) ஒரு நாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வட மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும், தமது மேலதிக நேரக்கொடுப்பனவை வழங்க கோரி இன்று திங்கட்கிழமை(14) காலை 8 மணி முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பல்வேறு தேவைகளுக்காக தூர இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

மாதாந்த கிளினிக் உற்பட பல்வேறு மருத்துவ தேவைகளுக்காக மன்னார் நகர் உள்ளடங்களாக தூர இடங்களில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்த அண்கள்,பெண்கள்,வயோதிபர்கள்,கர் ப்பிணி தாய்மார்கள், மாற்றாற்றல் கொண்டோர் உள்ளடங்களாக அனைவரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More