Home இலங்கைமீண்டும் வாள் மயமாகும் யாழ்ப்பாணம் – தென்மராட்சியில் வாள் முனையில் கொள்ளை…

மீண்டும் வாள் மயமாகும் யாழ்ப்பாணம் – தென்மராட்சியில் வாள் முனையில் கொள்ளை…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

தென்மராட்சி அறுகுவெளிப் பகுதியில் வாள் முனையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று நள்ளிரவுப் பொழுதில் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையில் முறையிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள வீடொன்றில் உட்புகுந்த கொள்ளையர்கள் நால்வர் குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்தியுள்ளனர். தாலிக்கொடி, காப்பு உள்ளிட்ட 10 பவுண் நகைகள், 2 இலட்சத்து, 30 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 2 கைபேசிகள் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதாகப் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More