Home இலங்கைகட்டுநாயக்க குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

கட்டுநாயக்க குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

by admin

கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் நேற்றைதினம் ஆரம்பித்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ. நாவின்னவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து அமைச்சர் வழங்கிய எழுத்துமூலமான உறுதிமொழியைத் தொடர்ந்து, தொழிற்சங்க நடவடிக்கை இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று   அமைச்சர் எஸ்.பீ. நாவின்ன மற்றும் குடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More