Home உலகம்பிரித்தானிய அரச குடும்பம் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது…

பிரித்தானிய அரச குடும்பம் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது…

by admin


பிரித்தானிய அரச குடும்பத்தினர் அனைத்து மக்களுக்கும் நன்றி பாராட்டியுள்ளனர். நேற்றைய தினம் பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் பிரபல நடிகை மெகன் மோர்கல் ஆகியோருக்கு இடையில் வின்ட்சோரில் திருமண நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருமண நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளது. வீதிகளில் நின்று தம்பதியினரை வாழ்த்திய மற்றும் தொலைக்காட்சியில் திருமண நிகழ்வினை கண்டு களித்த அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளது.

வின்ட்சோர் கோட்டையில் நடைபெற்ற இராப் போசன விருந்துபசாரத்துடன் திருமண நிகழ்வு நிறைவடைந்தது. இந்த நிகழ்வினை இளவரசர் சார்ள்ஸ் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தம்பதியினர் உடனடியாக தேனிலவிற்கு செல்ல மாட்டார்கள் எனவும், பிரித்தானியாவில் சில நாட்கள் தங்கியிருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More