இந்தியாவிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவன வளாகங்களில் பிளாஸ்டிக் கிண்ணங்கள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு தடை விதித்துள்ளது.
உலக சுற்றுப்புற சூழல் தினம் எதிர்வரும் 5-ம் திகதி கடைப்பிடிக்கப்பட உள்ளநிலையில் ஐநா சபை சார்பில் பிளாஸ்டிக் மாசுவை அகற்றுவோம் என்ற கருத்தை முன்னிறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து இந்தியாவில் பல்கலைக்கழக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது . பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மெகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யவேண்டும் எனவும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை குறைக்க இது நல்ல சந்தர்ப்பம் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.