தொலைக்காட்சிக்கும் உடற் பருமனுக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க சிறுவர் நல மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். குறிப்பாக சிறு வயதில் அதிகளவு நேரத்தை தொலைக்காட்சி முன்னிலையில் கழிப்பதனால் உடல் பருமனடைவதாகக் குறிப்பிட்டுள்ளனர். உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய உணவுப் பொருட்கள் தொடர்பான தொலைக்காட்சி விளம்பரங்களை பார்த்து அவ்வாறன பொருட்களை அதிகளவில் சிறுவர் உட்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.
உடல் பயிற்சி இன்றி அதிக நேரம் தொலைக்காட்சி முன் கழிப்பதனால் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிக சாத்தியம் காணப்படுகின்றது. சிறுவர் உடல் பருமன் மற்றும் தொலைக்காட்சி தொடர்பில் அமெரிக்க சிறுவர் நல மருத்துவர்கள் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கல்வி சாரா நிகழ்ச்சிகளுக்கு அதிக நேரத்தை பிள்ளைகள் செலவிடுவதனை பெற்றோர் தடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….