38,040 பேர் பாதிப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டு ஆக உயர்வடைந்துள்ளது எனவும், இதுவரை 38,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நாட்டின் பதினைந்து மாவட்டங்களுக்கு மழை காரணமாக அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பல்வேறு அனர்த்தங்களினால் இதுவரையில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் மழை வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களினால் சுமார் நாற்பதாயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான மழை காரணமாக அநேகமான நதிகள், குளங்கள் பெருக்கெடுத்து ஓடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment