Home இலங்கைஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை

அனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் அனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கூட்டு எதிர்க்கட்சியினால் நேற்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகலில் பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகும் போது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதம் நடாத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவாதம் நடத்துவது குறித்து இன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More