Home இந்தியா ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு..

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு..

by admin

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் இரு பெண்கள் உள்பட  11 பேர் பலியாகி உள்ளதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.  அவர்களில் 9 பேரின் விவரம்  வெளியாகி உள்ளது. இதேவேளை பிந்திக்கிடைத்த தகவல் ஒன்றின்படி மரணமானவர்களின் எண்ணிக்கை 14 எனவும் குண்டடிபட்டவர்களின் எண்ணிக்கை 30ற்கு மேல் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

1)ஜெயராம்- உசிலம்பட்டி (மக்கள் அதிகாரம்)

2) கிளாஸ்டன் (லூர்தம்மாள் புரம்- தூத்துக்குடி)

3)கந்தையா (சிலோன் காலனி – தூத்துக்குடி)

4) வெனிஸ்டா (17 வயது மாணவி) தூத்துக்குடி

5) தமிழரசன் – புரட்சிகர இளைஞர் முன்னணி- (குறுக்குசாலை – தூத்துக்குடி)

6) சண்முகம் (மாசிலாமணி புரம்- தூத்துக்குடி)

7) அந்தோணி செல்வராஜ் (தூத்துக்குடி)

8) மணிராஜ் தூத்துக்குடி

9) வினிதா (29)

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More