Home இலங்கைபாடசாலைக்குள் கஞ்சா விற்பனை செய்த மாணவர்கள் கைது -எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் :

பாடசாலைக்குள் கஞ்சா விற்பனை செய்த மாணவர்கள் கைது -எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் :

by admin

பாடசாலைக்குள் கஞ்சா விற்பனை செய்த மாணவர்கள் சிலர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ள சம்பவம் பெலியத்த காவல்துறைப் பிரிவில் பதிவாகியுள்ளதாகவும் இந்த விடயத்தை அரசாங்கம் கவனத்தில் எடுத்து எமது எதிர்கால சந்ததியினரை போதை பாவனைகளில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இது விடயமாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

இன்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போதைபொருட்கள் பாடசாலை மாணவர்களிடம் சர்வ சாதாரணமாக பரிமாறப்பட்டு வருகிறதாக அறிகிறோம்.பாடசாலைக்குள் கஞ்சா விற்பனை செய்த மாணவர்கள் சிலர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ள சம்பவம் பெலியத்த காவல்துறைப் பிரிவில் பதிவாகியுள்ளதாக இன்று எமக்கு அறியக்கிடைத்தது.இது ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரம் உள்ள பிரச்சினையல்ல முழு நாடும் முகம்கொடுத்துள்ள பிரச்சினை .

போதை பொருள்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிக்கிய பாதாள உலகத்தை சேர்ந்தவர்களின் திருமண வீடுகளுக்கு இந்த அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியமையின் விளைவே இன்று போதைபொருட்கள் பாடசாலை மாணவர்களிடம் சர்வ சாதாரணமாக பரிமாறப்பட்டு வருகிறது.

எம்மை சிறையில் அடைக்க எடுக்கும் கவனத்தை இந்த விடயங்களில் எடுத்து எமது பாடசாலை மாணவர்களை போதை பொருள் பாவணைகளில் இருந்து மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More