பிரதான செய்திகள் விளையாட்டு

ஐபிஎல்இறுதி போட்டியில் ஐதராபாத் – சென்னை அணிகள்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் தகுதிச்சுற்றுப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி களத்தடுப்பனை தெரிவு செய்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 175 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.  இந்தநிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி போட்டியில் ஐதராபாத் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap