இந்திய விமானப்படையில் உள்ள ஏ.என் 32 ரக விமான உதிரி பாகங்கள் கொள்வனவின் போது உக்ரைனில் உள்ள நிறுவனதுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதை அந்நாட்டு அரசாங்கம் கண்டுபிடித்துள்ளது.
குடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் உதிரி பாகங்கள் வினியோகம் செய்வது தொடர்பாக குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஒப்பந்தம் இடம்பெற்று 11 மாதங்களுக்கு பின்னர் இதில் பல்வேறு முறைகேடுகள் இடம்டபெற்றிருந்தமை உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்புக்கு தெரியவந்தது. இதற்காக இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுமார் 17.55 கோடி ரூபா லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் தொடர்பு, பணம் பரிமாற்றம் நடந்ததாக சந்தேகப்படும் துபாயில் உள்ள நூர் இஸ்லாமிக் வங்கி ஆகியவற்றிடம் விசாரணை நடத்த உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு முடிவு செய்தது.
இந்த விவகாரத்தில் தங்களுக்கு உதவும்படி இந்திய உள்துறை அமைச்சிக்கு உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு கடிதம் எழுதி உள்ளமை தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது