Home இலங்கைலசந்த கொலைச் சந்தேக நபர் இரகசிய அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்தார்…

லசந்த கொலைச் சந்தேக நபர் இரகசிய அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்தார்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….


சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இரகசிய அறிக்கை ஒன்றை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார். கல்கிஸ்ஸ காவல் நிலையத்தின் முன்னாள் துணைப் பரிசோதகர் திஸ்ஸ சிறி சுகதபால என்பவரே இவ்வாறு இரகசியமான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். கல்கிஸ்ஸ நீதவான் மொஹமட் மிஹாலிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் இந்த அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. லசந்த கொலை தொடர்பிலான தகவல்களை மூடி மறைத்தார் என சுகதபால மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More