Home இலங்கைஇன்புழுவென்சா வைரஸ் காய்ச்சலினால் குழந்தைகள் உயிரிழப்புகள் 14 ஆக அதிகரிப்பு

இன்புழுவென்சா வைரஸ் காய்ச்சலினால் குழந்தைகள் உயிரிழப்புகள் 14 ஆக அதிகரிப்பு

by admin

இன்புழுவென்சா வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த எட்டு மாத ஆண் குழந்தையொன்று கடந்த புதன் கிழமை இரவு உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழப்புகள் 14 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சுமார் ஆறு வார காலம் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த புதன் கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வலஸ்கல பிரதேசத்தைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இன்புழுவென்சா வைரஸ் காய்ச்சலுக்கு இலக்காகி மத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு குழந்தைகளும் காலி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த தலா மூன்று குழந்தைக்ளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More