Home உலகம்ரஸ்ய ஊடகவியலாளரை ,கொலை செய்ய முயற்சித்தவர் கைது

ரஸ்ய ஊடகவியலாளரை ,கொலை செய்ய முயற்சித்தவர் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ரஸ்யாவிற்கு எதிரான கருத்து வெளியிடும் ஊடகவியலாளர் அர்கடி பாப்சென்கோ ( Arkady Babchenko) ஐ கொலை செய்ய முயற்சித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வர்த்தகரான சந்தேகநபரை உக்ரேய்ன் நீதிமன்றம் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

அர்கடி பாப்சென்கோவை கொலை செய்வதற்கு போரிஸ் ஹெர்மன் (Boris German) என்ற வர்த்தகர் 15,000 டொhலர்களை கொலையாளிகளுக்கு வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது . முன்னதாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட ஊடகவியலாளர் அர்கடி பாப்சென்கோ பின்னர் தாம் உயிரிழக்கவில்லை என ஊடகங்களில் தோன்றி தெரிவித்திருந்தார்.

ஊடகவியாளர் அர்கடி பாப்சென்கோவை படுகொலை செய்வதற்கு ரஸ்யா போட்டிருந்த திட்டத்தை முறியடிப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Arkady Babchenko

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More