நிபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதுடன் 18 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக இதுவரை 2 தாதிகள் உள்பட 17 பேர் உயிரிர்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகமானோர் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனையடுத்து கேரளாவில் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலுசேரி தாலுகா மருத்துவமனையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர் உள்ளிட்ட ஊழியர்களை விடுப்பில் செல்ல மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நேற்றையதினம் பாடசாலைகள் திறக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது