இலங்கை பிரதான செய்திகள்

யாழ் வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த மேலுமொரு தொகுதி காணி கையளிக்கப்பட்டது…..

யாழ்ப்பாணம், வலி வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மற்றுமொரு தொகுதி, பொது மக்களது காணி இன்றைய தினம் மீள கையளிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ்.மாவட்ட இராணுவ தலைமையகத்தால் வலி வடக்கில் வீமன்காமத்தில் உள்ள ஜே -.236 கிராம சேவகர் பிரிவில் 33 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு அதற்கான காணி உறுதிகள் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மாவிட்டபுரம் கோவிலினை கடந்து சென்று காங்கேசன்துறை சீமெந்து தொழற்சாலையின் பிரதான வாயிலுக்கு எதிராகவுள்ள, இந்தக் காணிகள், 27 ஆண்டுகளின் பின்னர் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இந்த நிலையில், விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள தமது காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட்டு வருதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link