Home இலங்கைமொஹமட் நவாவியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சீனி மொஹமட் இஸ்மையில்

மொஹமட் நவாவியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சீனி மொஹமட் இஸ்மையில்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மொஹமட் நவாவி பதவி விலகியதன் காரணமாக வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சீனி மொஹமட் இஸ்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் றிசார்ட் பதியூதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த மொஹமட் நவாவி அண்மையில் பதவிவிலகியிருந்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மற்றுமொரு பிரதிநிதிக்கு வாய்ப்பை வழங்கும் நோக்கில் அவர் பதவிவிலகியிருந்தார். இதற்கு அமைய சீனி மொஹமட் மொஹமட் இஸ்மையில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளதுடன் சீனி மொஹமட் அடுத்த சில தினங்களில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More