164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அர்ஜூன் அலோசியஸ் தனக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் என்பது தனக்கு நினைவில் இல்லை என ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நண்பர் ஒருவரே மேற்கொண்டதாகவும் சம்பந்தப்பட்ட ஆவணங்களை பரிசோதித்த பின்னர், எவ்வளவு பணத்தை பெற்றேன் என்பது குறித்து கருத்து வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அர்ஜூன் அலோசியஸ் என்பவர் பிரபாகரன் அல்ல எனவும் சுஜீவ சேனசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Spread the love