Home பிரதான செய்திகள் பங்களாதேசை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியுள்ளது

பங்களாதேசை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியுள்ளது

by admin

பங்களாதேஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்களுக்கிடையே மூன்று இருபதுக்கு இருபது போட்டிகளையும் வென்று ஆப்கானிஸ்தான் தொடரை கைப்பற்றியுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த ஆப்கானிஸ்தான் அணி மூன்றாவது போட்டியில் ஒரு ஓட்டத்தினால் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

நேற்று நடைபெற்ற மூன்றாவதும் மற்றும் இறுதியுமான போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தநிலையில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்களைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து, 146 ஓட்டங்கள் என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய பங்களாதேஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஒரு ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் 20 ஓவர் தொடரை முழுமையாக 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக விருது முஷ்பிகுர் ரகிமும் தொடர் நாயகனாக ரஷித் கானும் தெரிவுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More