Home இலங்கை166 காசோலைகள் – சுஜீவ சேனசிங்கவுக்கு 33 மில்லியன் பொன்சேகாவுக்கு 1.5 மில்லியன்…

166 காசோலைகள் – சுஜீவ சேனசிங்கவுக்கு 33 மில்லியன் பொன்சேகாவுக்கு 1.5 மில்லியன்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

பர்ப்பச்சுவல் டெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் 166 காசோலைகள் மூலம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலருக்கு பணத்தை கொடுத்துள்ளதாக ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு 33 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தனக்கு கிடைத்த பணத்தில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளதாகவும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை அலோசியஸ் தனக்கு ஒரு லட்சம் ரூபா மாத்திரமே கொடுத்துள்ளதாக அமைச்சர் சரத் பொன்சேகா கூறிய போதிலும் அவருக்கு 15 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் பணத்தை பெற்றுக்கொண்டவர்களின் பெயர்களை வெளியிட எண்ணியுள்ளதாகவும் வசந்த சமரசிங்க கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More