123
திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் குழுவின் ஒன்றின் உறுப்பினர்கள் இருவர் விஷேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். இன்று (09.06.18) பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையின் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
கண்டி, மடவளை பிரதேசத்தில் வைத்து காவற்துறை விஷேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரபல பாதாள உலக குழுத் தலைவரான மாகந்துரே மதூஷின் குற்ற நடவடிக்கைகளை செய்து வந்த இருவரே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love