Home இலங்கைவவுனியாவில் தாயுடன் இருந்த குழந்தையை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் மேலும் 8 பேர் கைது..

வவுனியாவில் தாயுடன் இருந்த குழந்தையை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் மேலும் 8 பேர் கைது..

by admin

வவுனியாவில் அண்மையில் தாயுடன் இருந்த குழந்தையை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில், மேலும் 8 பேரை வவுனியா காவற்துறையினர், கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில், ஏற்கெனவே, இரு பெண்கள் மற்றும் ஆணொருவர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் 8 பேரை நேற்று (08.06.18) தாம் கைது செய்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இவர்களில் 6 பேர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரும் முல்லைத்தீவு மற்றும் வவுனியாவை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்படி , குழந்தையை கடத்துவதற்காக குழந்தையின் தந்தை, வவுனியாவைச் சேர்ந்த நபரினூடாக பண பேரம் பேசியதாகவும் குழந்தையை கடத்தி வைத்திருந்த இரு பெண்களுக்கும் 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோருக்கு தலா 5,000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன், குழந்தையை இந்தியாவுக்கு கடத்தி செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விசாணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கு வவுனியா காவற்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில், இதுவரை 13 பேர் கைது செய்ய்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More