147
பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தில் 10 இலட்சம் ரூபாய் காசோலை பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை எதிர்கொள்ளும் முகமாக எதிர்வரும் திங்கட்கிழமை (11.06.18) குற்றத் தடுப்புப் புலனாய்வு திணைக்களத்துக்குச் செல்ல தயாராகவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின் காரணமாகவே, தன்னால் குற்றத் தடுப்புப் புலனாய்வு திணைக்களத்துக்குச் செல்ல முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love