இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு 2 பாவப்பட்ட பணம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் தவராசா வீட்டின் வாசலில் கட்டப்பட்டது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாவப்பட்ட பணம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் வடமாகாண சபை எதிர்கட்சித் தலைவர் தவராசா வீட்டின் வாசலில் கட்டப்பட்டது

7 ஆயிரம் ரூபாவுடன், வட மாகாண சபையில் தவராசாவை தேடும் கிழக்கு பல்கலை மாணவர்கள்…

Jun 12, 2018 @ 08:03

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை வடமாகாணஅவைத் தலைவர்சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா திருப்பித் தரும்படி கொண்டிருந்த நிலையில் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் மேற்படிப் பணத்தை மக்களிடம் சேகரித்து இன்றை ய தினம் காலை வடமாகாணசபைக்குக் கொண்டுவந்துள்ளனர்.

மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாணசபையினால் நினை வுகூரப்பட்டது. இதற்காக மாகாணசபை உறுப்பினர்களிடம் 7500ரூபாய் அறவீடு செய்யப்பட்டது. இந்நிலையில் முள்ளிவாய்க் கால் நினைவேந்தலை வடமாகாணசபை செய்யவில்லை. அதனை கறுப்பு உடையணிந்த சிலரே நடாத்தினார்கள் என கூறி ய எதிர்கட்சி தலைவர், தம்மிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கடந்த மாகாணசபை அமர்வில் கேட்டிருந்தார்.  ஆனாலும் அந்த பணத்தினையும் சேர்த்தே நினைவேந்தல் செய்ய ப்பட்டது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியிருந்தார். மேலும் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் அதனை கூறியிருந்தார்.

இந்நிலையில் ஒரு ரூபாய் வீதம் 7ஆயிரம் பேரிடம் சேர்க்கப்பட்ட பணத்தை கொண்டு இன்று காலை கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் வடமாகாணசபைக்கு வந்திருந்தனர். எனினும் அவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம் அந்த பணத்தை வாங்க மறுத் துவிட்டார்.

இதன் பின்னர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடம் அந்த பணத்தை வழங்க மாண வர்கள் முயன்றபோது அவை தலைவருடன் பேசிவிட்டு மீண்டும் மாணவர்களுடன் பேசிய முதலமைச்சர் மேற்படி விடயம் தொடர்பாக கடந்த அமர்வில் பேசிவிட்டோம் ஆகவே இந்த பணத்தை வாங்கி கொள்ள மாட்டோம். ஆகவே நீங்கள் எதிர்கட்சித் தலைவருடன் பேசுங்கள் என கூறியுள்ளார். இதேவேளை இன்றைய அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொள்ளவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.