Home இலங்கையூரோ-4 எரிபொருள் அறிமுகத்தால் பெற்றோல் 92 – ஒடோ டீசல் ஆகியவை சந்தையில் இருந்து நீங்காது :

யூரோ-4 எரிபொருள் அறிமுகத்தால் பெற்றோல் 92 – ஒடோ டீசல் ஆகியவை சந்தையில் இருந்து நீங்காது :

by admin

யூரோ-4 எரிபொருள் அறிமுகத்தால் இலங்கை எரிபொருள் சந்தையில் இருந்து 92 (ஒக்டேன்) பெற்றோல் மற்றும் ஒடோ டீசல் என்பவை நீக்கப்படமாட்டாது என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் உபாலி மாரசிங்க ;தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘யூரோ-4 எரிபொருள் அடுத்த மாதம் முதல் சந்தையில் விற்பனைக்கு வருகின்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. யூரோ-4 தரத்திற்கான ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் சுபர் டீசல் என்பவை அறிமுகப்படுத்தப்படும் நிலையில், தற்போது உள்ள ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் சுபர் டீசல் என்பவற்றின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. அதேவேலை அறிமுகப்படுத்தப்படவுள்ள யூரோ ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் சுபர் டீசல் என்பவற்றின் விலையானது தற்போதைய விலையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

யூரோ-4 என்றது ஐரோப்பிய யூனியனால் அங்கிகரிக்கப்பட்ட எரிபொருள் தரமாகும். இந்த தரத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் எரிபொருளானது சுற்றாடலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும் வாகனங்களின் தரத்தையும் உறுதிப்படுத்தும். பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு என்பவை இனைந்தே இந்த புதிய தரத்திலான எரிபொருளை அடுத்தமாதம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

இதேநேரம் ஈரோ 04 அறிமுகமானதும் சாராதன தரத்திலான பெற்றோல் ஒக்டேன் 95 மற்றும் சுபர் டீசலை ஆகியவை சந்தையில் இருந்து நீங்க வழிவகுக்கும். ஆனால் எரிபொருள் சந்தையில் பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் ஒடோ டீசல் என்பவற்றுக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நான் நூகர்வோர்களிடம் தெரிவிப்பது இந்த புதிய ரக ஈரோ 04 எரிபொருள் எமது சுற்றாடலுக்கும் வாகனங்களுக்கும் பிரதிகூலமாக அமையும்’ என்றார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More