Home இந்தியாகேரளாவில் நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி – 9 பேரைக் காணவில்லை

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி – 9 பேரைக் காணவில்லை

by admin


கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல இடங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதனால் சில பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைச்சரிவில் இருந்த பல வீடுகள் கடுமையாக சேதம் அடைந்தன.

இந்தநிலையில் நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப்பணியின் போது 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதுடன் காணாமல் போன 9 பேரை தேடும் பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலத்த மழை, நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்கள் தங்க நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More