குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி பெரிய கருசல் பகுதியில் அமைந்துள்ள புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் முகப்பில் வைக்கப்பட்டிருந்த மாதா திருச் சொரூபத்தின் கண்ணாடிகள் இனம் தெரியாத நபர்களினால் நேற்று வியாழக்கிழமை உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று மாலை ஆலயத்திற்கு சென்ற கிராமத்தவர்கள் அவதானித்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக சின்ன கருஸல் பங்குத்தந்தை இ.செபமாலை அடிகளாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பேளையின் கண்ணாடி கற்கள் வீசப்பட்டு உடைக்கப்பட்டுள்ளதுடன் வீசப்பட்ட கல்லும் சிறிய ரீப்பை துண்டும் சம்பவ இடத்தில் இருந்து மீட்டுள்ளது. குறித்த இரு சம்பவங்கள் தொடர்பாக மன்னார் காவல் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15) மதியம் ஆலய சபையினர் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.குறித்த இரு சம்பவங்கள் தொடர்பாக மன்னார் ஆயரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான பிரச்சினைகள் குறித்த பிரதேசத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதாகவும் குறித்த சம்பவங்களுடன் ஈடு படுகின்றவர்களுக்கு எதிராக கொவல்துறையினர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆலயம் மற்றும் ஆலய சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பாக பல்வேறு வழக்கு விசாரனைகள் நீதிமன்றத்தில் காணப்படுகின்ற போதும் குறித்த சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றமை வேதனையை ஏற்படுத்துவதாக பாதீக்கப்பட்ட சின்னக்கருசல் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.