Home உலகம் புற்றளை யோகாசன விழா

புற்றளை யோகாசன விழா

by admin

புற்றளை யோகாசன விழா நேற்றுமுன்தினம்   (15.06.2018) புலோலி, யா/புற்றளை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.  பருத்தித்துறை பிரதேச செயலாளர் திரு.ஆழ்வாப்பிள்ளை சிறி பிரதம விருந்தினராகவும், ஓய்வு நிலை பொறியியலாளர் திரு.முத்தையா சண்முகராஜா அவர்கள் கௌரவவிருந்தினராகவும்   கலந்து சிறப்பிக்க, யோகாசன ஆசான் சீகன்.மா.இரத்தினசோதி, வைத்தியகலாநிதியும் உளவள நிபுணருமான  திருமதி.முல்லை பரமேஸ்வரன், வடமராட்சி பிரதி கல்வி பணிப்பாளர் திரு.உ.சுரேஷ்குமார், சித்த மருத்துவரும் யோகாசன நிபுணருமான திரு. பா.பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
புற்றளை சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையின் துணை அமைப்புகளில் ஒன்றான புற்றளை யோக பாடசாலையின் 2 ஆண்டு பூர்த்தியையும் உலக யோகாசன தினத்தையும் குறித்து ஆலய பரிபாலன சபையினரால் நடாத்தப்பட்ட இவ்விழாவில் கடந்த ஏப்பிரலில் வடமராட்சி வலயத்தை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட யோகாசன போட்டி 2018 இல் பங்கு கொண்டு வெற்றி பெற்ற 26 மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதலாமிடம் பெற்றோருக்கும் ஆண்கள், பெண்கள் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்கள் பெற்ற பாடசாலைகளுக்கும்    வாகையர் (Champion) கிண்ணங்களும் வழங்கப்பட்டன. பெண்கள் பிரிவில் யா/பருத்தித்துறை பெண்கள் உயர்தர பாடசாலை முதலாமிடத்தையும், யா/உடுப்பிட்டி பெண்கள் கல்லூரி இரண்டாமிடத்தையும் யா/ தும்பளை சிவப்பிரகாச வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் பெற, ஆண்கள் பிரிவில் யா/வல்வெட்டி விநாயகர் வித்தியாலயம் முதலாமிடத்தையும் யா/காட்லிகல்லூரி இரண்டாமிடத்தையும் யா/பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் வென்றன.  மேலும் கடந்த ஏப்பிரலில் ஆசிரிய யோகாசன நெறியை பூர்த்தி செய்த 11 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஆலய நிர்வாகதினர்,  பெருமளவு ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள்  மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் “கல்வி, நோயின்மை, சமூக நல்லுறவு, பல்துறை ஆளுமை போன்ற பலவற்றை மேம்படுத்த உதவும் யோகாசனம் இன்று எமது சமுதாயத்தை ஆற்றலுள்ளதாக மாற்றுவதற்கு மிக மிக அவசியம்”, “கோவில்கள் ஆலயங்களின் அத்தியாவசிய பணிகளுக்கு வேண்டிய நிதியை அதற்கு பயன்படுத்திக்கொண்டு மீதி பணத்தை வீண் செலவு செய்யாமல் இதுபோன்ற சமூக நற்பணிகளுக்கு பயங்கப்படுத்த வேண்டும்”, “உள்ளம் பெருங்கோவில்,ஊனுடம்பு ஆலயம் என்கிறார் திருமூலர். எனவே மானுடர்களின் உடல் உள்ளதை செம்மைப்படுத்தும் யோகாசன பணி கோவிலை பேணி கடவுளை வழிபடுதற்கு சமம்” போன்ற கருத்துக்கள்முன் வைக்கப்படடன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More