Home சினிமாஅப்பா 2 – சமுத்திரக்கனியின் அடுத்த அறிவிப்பு

அப்பா 2 – சமுத்திரக்கனியின் அடுத்த அறிவிப்பு

by admin


சமுத்திரக்கனி இயக்கத்தில் `நாடோடிகள்-2′ படம் வெளியீட்டுக்கு  தயாராகி வருகின்ற நிலையில், அடுத்து `அப்பா’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கப் போவதாக நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி அறிவித்துள்ளார்.    `காலா’ படத்தில் தனித்துவமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ள சமுத்திரக்கனி நடிப்பில், அடுத்ததாக `ஆண்தேவை’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அத்துடன் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி ஊள்ள `நாடோடிகள்-2′ திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கின்றது.

இந்த நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை சமுத்திரக்கனி நேற்று வெளியிட்டுள்ளார். சமுத்திரக்கனி இயக்கத்தில் கடந்த 2016ஆம் வெளியான படம் `அப்பா’. சமுத்திரக்கனி, தம்பி ராமைய்யா, நமோ நாராயணா, கேப்ரியல்லா சார்ல்டன், விக்னேஷ் உள்ளிட்ட பலரும் நடித்த  இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்றை பெற்றது.

திரையரங்குகளில் நிறைவாக ஓடிய இந்த திரைப்படம் ஓர் நல்ல திரைப்படம் என்ற பெயரை விமர்சன ரீதியாகவும் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை தான் இயக்கவிருப்பதாக சமுத்திரக்கனி அறிவித்துள்ளார்.

தந்தையர் தினமான நேற்று தந்தையர் தின வாழ்த்துக்களுடன் `அப்பா-2′ படம் ஆரம்பமாகியிருப்பதாக சமுத்திரக்கனி திரைச்சுவரொட்டியுடன் (போஸ்டர்) அறிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More