பிரதான செய்திகள் விளையாட்டு

இந்திய தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடிக்கவில்லை

இந்தியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடிக்கவில்லை எனத் தெரிவிக்கபட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியின் போது அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியிலும் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கவில்லை.

இந்தநிலையில் தற்போது இந்தியாவிற்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரிலிருந்தும் வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1999-ம் ஆண்டிற்குப்பிறகு சகோதரர்கள் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளனர். டாம் குர்ரான், சாம் குர்ரான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap