183
யாழ்.மல்லாகம் பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள் இன்று மாலை நடைபெற்றது. மல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுகிழமை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் குளமங்கால் பகுதியை சேர்ந்த ஜோர்ஜ் பாக்கியராஜா சுதர்சன் (வயது 28) எனும் இளைஞர் உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞனின் நல்லடக்க ஆராதனை குளமங்கால் புனித சவேரியார் ஆலயத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 3மணியளவில் நடைபெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு குளமங்கால் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்ப்பட்டது.
Spread the love