145
இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதலாவது போட்டியில் கொலம்பியா – ஜப்பான் அணிகள் போட்டியிட்ட நிலையில் ஜப்பான் 2-1 என வெற்றி பெற்றது. உலகக்கோப்பை வரலாற்றில் ஆசிய கண்ட அணி ஒன்று தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள அணியை முதன்முறையாக தோற்கடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இடம்பெற்ற போலந்து மற்றும் செனகல் அணிகளுக்கிடையிலான போட்டியில் செனகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது . மூன்றாவதாக ரஸ்யாவுக்கும் எகிப்துக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் ரஸ்யா 3-1 என கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
Spread the love