Home உலகம்அமெரிக்கா ஐநா மனித உரிமைகள் அமைப்பிலிருந்து விலகியுள்ளது

அமெரிக்கா ஐநா மனித உரிமைகள் அமைப்பிலிருந்து விலகியுள்ளது

by admin

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பு மனித உரிமைகள் தொடர்பில் கேலிக்கூத்து செய்கிறது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமெரிக்கப் பிரதிநிதியான நிக்கி ஹெலே தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்  ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே நிக்கி ஹெலே ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவது குறித்து அறிவித்துள்ளார். அரசியல் சார்பின் முரண்பாடு காரணமாகவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது எனவும் மனித உரிமைகள் பற்றிய கேலிக்குரிய ஒரு பாசாங்குத்தனமான மற்றும் சுய சேவை நிறுவனத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பு செயல்பட்டு வருகிறது.  இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே நாங்கள் இந்த அமைப்பில் இருந்து விலகுவது என்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியிருந்ததுடன் அண்மையில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்தும் வெளியேறுவதாக அறிவித்திருந்தது.

ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த அமெரிக்கா ஐ.நா. சபை மனித உரிமை அமைப்பிலிருந் வெளியேறி விடுவோம் என எச்சரிக்கை விடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More