இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு2 – ஒட்டுசுட்டான் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது- கைதுகள் தொடரும் என தெரிவிப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஒட்டுசுட்டான் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய இருவரில் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது வரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது தொடரும் வாய்ப்புக்கள் இருக்கிறது என காவல்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர்

ஒட்டுசுட்டானில் கிளைமோர், புலிக்கொடியுடன் ஒருவர் கைது – இருவர் தப்பி ஓட்டம்

Jun 22, 2018 @ 06:11

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிளைமோர் குண்டு என்பவற்றுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் இன்று (22) காலை கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து இருபது கிலோ கிளைமோர் குண்டு கைக்குண்டு ஒன்று றிமோட் கொன்ரோல் நான்கு T56 துப்பாகி தோட்டாக்கள்- 98, விடுதலைப்புலிகளின் சீருடை – 2, சுமார் 45 வரையான விடுதலைப்புலிகளின் புலிக்கொடி என்பவை மீட்கப்பட்டுள்ளன.

குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் தப்பி ஓடியுள்ள நிலையில், கைதானவர் கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தப்பி ஓடிய இருவர்களில் ஒருவர் கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அறிய முடிகிறது.

இன்று காலை வீதியில் சென்ற முச்சக்கர வண்டியை சந்தேகத்தின் பெயரில் போக்குவரத்து காவல்துறையினரினால் சோதனை செய்த போதே இக் கிளைமோர் குண்டு மற்றும் புலிக்கொடி மீட்கப்பட்டுள்ளன இருப்பினும் விசாரணைகள் நடப்பதனால் எதனையும் கூறமுடியாது என ஒட்டுசுட்டான் காவல் நிலையை பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்

மேலும், தப்பி ஓடியவர்களை பிடிக்க விசேட அதிரடிப்படை ஒரு குழுவை அமைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருவதோடு, கிளிநொச்சி காவல்துறையினரும் ; மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.