நாட்டில் பேச வேண்டிய பல பிரச்சினைகள் இருக்கும் போது பௌத்த பிக்கு ஒருவர் கூறிய கருத்தை பிடித்துக்கொண்டு மக்களின் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்பும் செயலில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சம்பந்தமாக பிக்கு ஒருவர் கூறிய கருத்தை சரியாக புரிந்துக்கொள்ளாத சிலர், பிக்குமாருக்கு அவதூறு ஏற்படுத்தி வருகின்றனர். இப்படியான விமர்சனங்களுக்கு நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். நாட்டில் பல பெரிய பிரச்சினைகள் இருக்கும் போது பிக்கு கூறிய கருத்தை பெரிய பிரச்சினையாக பேசி வருகின்றனர் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பிரச்சினைகளை திசை திருப்ப பிக்குவின் கருத்தை பிடித்துள்ளனர்…
124
Spread the love