உலக கிண்ண கால் பந்தாட்ட போட்டியில் செர்பியாவுக்கு எதிரான போட்டியின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சுவிஸ்சலாந்து வீரர்கள் இருவருக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் அபராதம் விதித்துள்ளது. குறித்த போட்டியில் சுவிஸ்சலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இந்தப் போட்டியின் போது சுவிஸ்சலாந்து வீரர்கள் கிரானிட் ஷக்கா ( Granit Xhaka ) , ஷெடார்ன் ஷகிரி ( Xherdan Shaqiri) ஆகியோர் கோல் அடித்த போது, அல்பேனியா நாட்டு தேசிய கொடிக்குரிய இரட்டை கழுகு தலையை நினைவூட்டும் வகையில் செய்கை காட்டியிருந்தனர். அல்பேனியாவுக்கும் செர்பியாவுக்கும் இடையிலான உறவுகள் சீராக இல்லாமையினால் சுவிஸ்சலாந்து வீரர்களின் இந்த செயலினை செர்பியா கால்பந்து சங்கம் கடுமையாக விமர்சித்திருந்தது.
இந்த நிலையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஷக்கா, ஷகிரி இருவருக்கும் தலா 10, 100 டொலர்கள் அபராதமாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது