119
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
பாடசாலை மாணவி றெஜினா துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நீதி கிடைக்க வேண்டுமெனக் கோரியும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் முன்னால் இன்று காலை ஒன்று கூடிய மாணவர்கள் பல்கலைக்கழக முன்பாக பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பல்கலையிலிருந்து பேரணியாக பரமேஸ்வராச் சந்தியைச் சென்றடைந்தனர். அங்கு வீதியின் இருமருங்கிலும் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்து பரமேஸ்வராச் சந்தி வீதி மறியலிலும் ஈடுபட்டிருந்தனர்.
Spread the love