Home இலங்கை மானிப்பாயில் வயோதிப் பெண் வெட்டிக் கொலை

மானிப்பாயில் வயோதிப் பெண் வெட்டிக் கொலை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மானிப்பாய் லோட்டன் வீதியிலுள்ள வீடொன்றிலில் வயோதிப் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ‘தர்மம் எடுக்க வந்ததாக பாவனை செய்தவர்களே வயோதிபப் பெண்ணை கொலை செய்திருக்கின்றனர். அந்த வீட்டில் குறித்த முதுமைப் பெண்ணைப் பராமரித்து வருபவர். சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்டார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் செயற்படுகிறார்’ என்று மானிப்பாய் காவல்துறையினர் ; தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் (28) இடம்பெற்றது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த லீலா தேவி (வயது -69) என்ற வயோதிபப் பெண்ணே கொல்லப்பட்டார்.

‘தர்ம எடுக்க ஒருவர் வந்தார். அவருக்கு 100 ரூபா பணம் வழங்கப்பட்டது. அவர் சென்று சிறிது நேரத்தில் மீளவும் வந்தார். வந்து வீட்டில் பணியாற்றும் முதுமைப் பெண்ணை கழுத்தறுத்துவிட்டு தப்பித்தார். அவருடன் இன்னுமொருவரும் வந்தார் எனத் தோன்றுகின்றது’ என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது என்று காவல்துறையினர் மேலும் கூறினர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More