உலகம் பிரதான செய்திகள்

சீனாவில் ஆரம்பப் பாடசாலையில் கத்திக்குத்து- இரு மாணவர்கள் பலி

சீனாவில் ஷாங்காய் நகரத்துக்கு உட்பட்ட சூகுய் மாவட்டத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் இன்று வியாழக்கிழமை காலை  மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவரின் தாயார் ஆகியோர் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் மேற்கொண்டநிலையில் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் 2 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்துள்ளனர். தாக்குலாளி 29 வயதானவர் எனவும் வேலை இல்லாத சமூகத்தின் மீது மிகுந்த கோபம் கொண்டவர் எனவும் அந்தக் கோபத்திலும், வெறுப்புணர்விலும்தான் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap