இலங்கை பிரதான செய்திகள்

மஹிந்தவை  30% ­மக்களே ஆதரிக்கின்றனர் – கோத்தா USA பிரஜை – பொறுப்­புக்­கூறலில் அழுத்தம் தொடரும்…

ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கி­யுள்­ள­போ­திலும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் இலங்கை அரசாங்கத்துக்கான அழுத்­தங்­களை தொடர்ந்து பிரயோகிப்போம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் உறுதியளித்துள்ளார்.

வட­மா­காண முத­ல­மைச்சரை அமெ­ரிக்கத் தூதுவர் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமைப் பேர­வை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கி­யுள்­ள­போ­திலும் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை நடைமுறைப்படுத்தும் விட­யத்தில் அமெரிக்காவுடன் இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யுள்­ளது.

இதனால் அந்த பொறுப்­புக்­கூறும் விட­யத்­தி­லி­ருந்து இலங்கை அர­சாங்கம் நழு­வி­விட முடி­யாது. இதற்­கான அழுத்­தங்­களை தொடர்ந்தும் அமெ­ரிக்கா முன்­வைக்கும். அர­சாங்க உயர்­மட்­டத்­தி­ன­ருக்கு இவ்­வி­டயம் தொடர்பில் எடுத்­துக்­கூ­றப்பட்டு உள்ளது.. இதனால் பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்தும் விட­யத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் அக்­கறையை கொண்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஜனாதி­பதித் தேர்­தலில் மஹிந்த தரப்பு வெற்­றி­பெ­று­வது கடி­ன­மான காரி­ய­மா­கவே இருக்கும். மஹிந்த அணியினரை முப்­பது வீத­மான மக்­களே ஆத­ரிப்­ப­தாகத் தெரி­கின்­றது. ஏதோ ஒரு கார­ணத்­துக்­காக ஏனைய மக்கள் அவர்களுக்கு எதி­ரா­கவே உள்­ளனர். அதற்குப் பல கார­ணங்கள் இருக்­கலாம் எனவும் அவர் கூறி­யுள்ளார்.

மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஒரு அமெரிக்க பிரஜையாவார். அமெ­ரிக்க பிர­ஜை­யா­க­வுள்ள ஒருவர் அந்தப் பிர­ஜா­வுரி­மையை இரத்துச் செய்­ய­வேண்­டு­மானால் அதற்­கான சட்­ட­திட்­டங்கள் உள்­ளன. அவ்­வா­றான நிலையில் அந்த சட்­ட­திட்­டங்­களில் அமெ­ரிக்க அதி­கா­ரிகள் தலை­யிட முடியும் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இந்த சந்­திப்­பின்­போது இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ர­ணை­யினை நடத்­தக்­கோரும் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் பிரே­ரணை முழு­மை­யாக நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் கவலை தெரி­வித்­துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.