185
சார்ஜாவில் இருந்து கோவைக்கு 1 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கடத்தி வந்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் வந்தவர்களை சோதனை செய்த விமான நிலைய ஊழியர்கள் இவ்வாறு தங்கம் கடத்தப்பட்டு வருவதனை கண்டு பிடித்துள்ளனர்.
மொத்தம் 3 கிலோ 675 கிராம் எடையுள்ள தங்கம் கட்டிகள் சிறிய பிஸ்கட்டுகளாக மறைத்து வைக்கப்பட்டு இ கடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தங்கத்தினை கடத்தி வந்த கேரளாவினை; சேர்ந்த 25 வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து குறித்த இளைஞர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Spread the love