Home இலங்கைஇசுருபாயவில் ,கல்வியமைச்சுக்கு முன்னால் போராட்டம் பதற்றம்….

இசுருபாயவில் ,கல்வியமைச்சுக்கு முன்னால் போராட்டம் பதற்றம்….

by admin


கல்வித் துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் சில இணைந்து பெலவத்தை, இசுருபாய பிரதேசத்தில் கல்வியமைச்சுக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பிரதேசத்தில் சற்று குழப்பநிலை எற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அதனை கட்டுப்படுத்த சென்ற காவற்துறையினருக்கும் இடையே மோதல் நிலை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக பொரள்ளை – கொட்டவ பிரதான வீதி ஊடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததுடன், அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது.

கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட துறைசார்ந்த பல அதிகாரிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அந்த வேலை நிறுத்தம் வெற்றிகரமாக இடம்பெறுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறினார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More