Home உலகம்இணைப்பு 2 – தாய்லாந்து; படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

இணைப்பு 2 – தாய்லாந்து; படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

by admin

தாய்லாந்து; படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ளது. மேலும் உயிரிழந்தவர்கள் அணைவரும் சீன நாட்டினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில் உள்ள பிரபல சுற்றுலா தீவான புக்கெட் அருகே நேற்று மாலை 105 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காணாமல் போனதாக முதல்கட்ட தகவல் வெளியாகியிருந்தது.

இந்தநிலையில் குறித்த விபத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தாய்லாந்து கடற்படை வீரர்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் நிலையில் உயிரிழந்த 21 பேரின் உடல்களை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தாய்லாந்தில் படகு கவிழ்ந்து விபத்து – 20 பேரைக் காணவில்லை

Jul 5, 2018 @ 17:45

தாய்லாந்தில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் சுற்றுலா தீவான புக்கெட் (Phuket ) அருகே இன்று மாலை சுற்றுலாப்பயணிகள்   90 பேரை ஏற்றிக் கொண்டு சென்ற படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினரால் பலர் மீட்கப்பட்டு விட்ட போதிலும் 20 பேரைக் காணவில்லை எனவும் தொடர்ந்தும் மீட்புப்பணி இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More