Home இலங்கைஇணைப்பு 2 – புதிய விலையில் எரிபொருளை விற்கவேண்டாம் என எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவிப்பு

இணைப்பு 2 – புதிய விலையில் எரிபொருளை விற்கவேண்டாம் என எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவிப்பு

by admin

 

நேற்று நள்ளிரவு அதிகாரிக்கப்பட்ட புதிய விலையில் எரிபொருள் விற்கவேண்டாம் என சகல பெற்றோலிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என கொழும்பு பெற்றோலிய கூட்டுத்தாபன பாவனையாளர் சேவை பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது

இவ்வாறான நிலையில் புதிய விலைப்படி கூடிய விலைக்கு விற்றால் 115455455 என்ற தொலைபேசிக்கு அழைத்து தெரிவிக்குமாறு அவர மேலும் தெரிவித்தார்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன

Jul 6, 2018 @ 06:26

எரிபொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கபப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 8 ரூபாவினாலும் ஒரு லீற்றர் டீசலின் விலை 9 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் ஒரு லீற்றர் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 148 ரூபாவிலிருந்து 155 ரூபாவாகவும் ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 119 ரூபாவிலிருந்து 129 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More