குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
Jul 6, 2018 @ 19:20
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்திற்காக சீன நிறுவனம் ஒன்று கோடிக்கணக்கில் பணம் வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை அடுத்து நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் நம்பகத்தன்ம குறித்து ராஜபக்ச தரப்பினர் கேள்வி எழுப்பியதுடன் அது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசப்படும் தலைப்பாக மாறியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் ராஜபக்ச தரப்பினரை கேலி செய்யும் வகையில் தனியாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது , நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் தலைமையகத்திற்கு எதிரில் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
யசிறு சமரகோன் என்ற இந்த இலங்கையர் நியூயோர்க் நகரில் உள்ள நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிரில், அந்த பத்திரிகைக்கு எதிராக சிங்களத்தில் எழுதப்பட்ட வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். ராஜபக்சவினரின் குற்றச்சாட்டு தொடர்பாக நகைச்சுவையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர் இந்த ஆர்ப்பாட்டத்தை செய்துள்ளதாக தெரியவருகிறது. யசிரு சமரகோன் செய்த இந்த நகைச்சுவையான ஆர்ப்பாட்டம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் நியூயோர்க் ரைம்ஸூக்கு எதிராக மாபெரும் தனிநபர் ஆர்ப்பாட்டம் இன்று நியூயோர்க் சந்தியில் பத்திரிகை அலுவலகத்திற்கு எதிரில் நடத்தப்பட்டது என யசிரு சமரகோன் தனது முகநூலில் குறிப்பு ஒன்றை பதிவிட்டு புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.